தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஹன்சிகாவுக்கும் தொழிலதிபர் சோஹைல் கதூரியாவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 4ந் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை ஹன்சிகா இன்று முதல் நடிக்க முடிவு செய்தார். இதற்காக மும்பையில் இருந்து விமானம் முலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் நடிகை ஹான்சிகாவை ரசிகர், ரசிகைகள் உற்சாகமாக வரவேற்றனர். மாலை அணிவித்தும் ரோஜாப் பூ தந்தும் வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் ஹன்சிகா பேசுகையில், தாய் வீட்டிற்கு மகள் வரும் போது எப்படி இருக்குமோ அதுப்போல் உணர்கிறேன். ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். நந்தகோபால் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு 7 படங்கள் வர போகிறது. இந்தாண்டு லக்கியானதாக உள்ளது. சென்னையில் ஒரு மாத படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள உள்ளோன். கல்யாண வாழ்க்கை மிகவும் நல்ல இருக்கிறது. திருமண வாழ்க்கையை அனுபவிக்கிறேன். இன்றைய கால சமுதாயமாக உள்ளதால் எல்லாரும் சமம். சினிமா படப்பிடிப்புக்காக வந்து உள்ளேன். கல்யாண வாழ்க்கைக்கு பின் மோதிரம் தான் மாறி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.