கரூரில் அம்பேத்கரை அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மையை எரித்து, செருப்பு காலால் மிதித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
அம்பேத்கரை அவதுாறாக பேசியதாக கூறி, மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் இளங்கோ தலைமையில், கட்சி நிர்வாகிகள் 30க்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விசிகவினர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த அமித்ஷா உருவ பொம்மையை பாதி தீ வைத்து எரித்த நிலையில் எடுத்து வந்து சாலையில் போட்டு செருப்பு காலால் மிதித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்து, உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.