நாடாளுமன்ற மாநிலங்களவையில், அரசியலமைப்பு சட்டத்தை தலைமையேற்று உருவாக்கிய மாமனிதர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை இழிவுபடுத்தி அவதூறாக பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்த அவரை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து பாஜக மோடி அரசு வெளியேற்ற வேண்டுமென வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணாசிலை அருகில் ஒன்றிய செயலாளர் து.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சிபிஐ மாவட்டத் துணைச் செயலாளரும் ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலாளருமான த.தண்டபாணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் G.ஆறுமுகம், செந்துறை ஒன்றியம் K. சிவக்குமார், அரியலூர் ஒன்றியம் நாகமங்கலம் S.பிச்சைப்பிள்ளை, கல்லக்குடி வனிதா, முருகேசன், பானுமதி, சாந்தி, எருத்துக்காரன்பட்டி R.மருதமுத்து, ப. ரேவதி, காவனூர் ரத்தினஜெயவேல், மகளிர் குழு மா. நல்லம்மாள் ஜெயங்கொண்டம் நகராட்சி N.சுரேஷ், பா.ஜெயா, திருமானூர் ஒன்றியம் கோவிலூர் R.சின்னதுரை, T.ஜீவா, மருதமுத்து, செட்டிக்குழி இளையராஜா, கீழகொளத்தூர் சுப்பிரமணியன், தா. பழூர் ஒன்றியம் இ. முருகேசுவரி உட்பட திரளாக கலந்து கொண்டனர்.