Skip to content

சம்பளம் வழங்காத தனியார் ஆலையை கண்டித்து… கோவையில் தொழிலாளர்கள் போராட்டம்….

  • by Authour

கோவை மாவட்டம் காரமடை அடுத்த ஜடையாம்பாளையம் பகுதியில் ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்கும் KG DENIM எனும் நிறுவனம்(தனியார்) செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தில் ஏற்பட்ட ஏற்றுமதி இழப்பு காரணத்தினால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத சூழல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களுக்கு சுமார் 4 மாத காலங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் இரண்டு ஆண்டுகளாக போனஸ் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி இன்று அந்த தொழிலாளர்கள் சிஐடியு நிர்வாகிகளுடன் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் உடனடியாக தங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம், போனஸ் நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும் அதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

இது குறித்து பேசிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்க கோவை மாவட்ட துணை தலைவர் ராமகிருஷ்ணன், அந்த நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு சட்ட சலுகைகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை எனவும் எனவே மாவட்ட ஆட்சியர் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு தீர்வு காணாவிட்டால் போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவோம் எனவும்

error: Content is protected !!