மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் பேசும்போது சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளன.
தமிழ்நாட்டில் இன்று திமுக, அனைத்து மாவட்டங்களிலும் அமித்ஷாவை கண்டித்து போராட்டம் நடத்தியது. சென்னையில் ஆர்.எஸ். பாரதி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூரில் இன்று காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர திமுக செயலாளர் கனகராஜ், எம்.எல்.ஏக்கள் குளித்தலை மாணிக்கம், அரவக்குறிச்சி இளங்கோ, கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் அனைத்து ஒன்றிய, நகர திமுக செயலாளர்கள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர், கவுன்சிலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அமித்ஷாவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். அம்பேத்கர் படங்களையும், திமுக கொடிகளையும் ஏந்தியவாறு சுமார் 1 மணி நேரம் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.