Skip to content
Home » டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மீண்டும் விண்ணப்பிக்கவும்….. புதுகை கலெக்டர் அறிக்கை

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு மீண்டும் விண்ணப்பிக்கவும்….. புதுகை கலெக்டர் அறிக்கை

சத்துணவுத் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு கணினி இயக்குபவர் வீதம் 13 கணினி இயக்குபவர்கள் (Data Entry Operator) பணியிடம் பகுதிநேர அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நேரடி நியமனம் செய்திட மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு வெளியிட்டார்  . அதன்படி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கொரோனா நோய் தொற்று மற்றும் இனசுழற்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் நேர்முக தேர்வு நடத்திட இயலவில்லை. தற்போது நிர்வாக நலன் கருதி ஏற்கனவே 28.10.2021 அன்றைய பத்திரிகை செய்தியின்படி அறிவிக்கப்பட்ட பகுதிநேர தற்காலிக கணினி இயக்குபவர்கள் நேரடி நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகிறது.

கணினி இயக்குபவர் (Data Entry operator) காலிப்பணியிட நியமனத்திற்கு விண்ணப்பங்கள் பெற பத்திரிகை செய்தி பின்னர் வெளியிடப்படும். அதன்படி ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் மீளவும் புதிதாக விண்ணப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை  புதுகை கலெக்டர் .கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *