அரியலூர் மாவட்டம் தேளூரில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இன்று காலை 11 மணி அளவில் பள்ளியில் கணினி அறையில் திடீரென ஒரு கணினி வெடித்தது. அதில் இருந்து கரும்புகை கிளம்பியது. அது அந்த அறை முழுவதும் பரவி, அருகே உள்ள மற்ற வகுப்புகளுக்கும் தாவியது. இதனால் பாதிக்கப்பட்ட 19 மாணவர்களை மீட்டு அரியலூர் அரசினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரியலூர்…… பள்ளியில் கம்ப்யூட்டர் வெடித்தது….. 19 மாணவர்கள் பாதிப்பு
- by Authour
