Skip to content

புலியூர் பேருராட்சி தலைவரை மாற்றக் கோரி…கவுன்சிலர் கரூர் கலெக்டரிடம் புகார் மனு….

  • by Authour

கரூர் மாவட்டம், புலியூர் பேருராட்சி 4 வது வார்டு கவுன்சிலர் விஜயகுமார். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவர் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கினார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது.

புலியூர் பேருராட்சியில் புவனேஷ்வரி என்பவர் 2 ஆண்டுகளாக தலைவராக உள்ளார். அவர் இதுவரை மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்குகாக எந்த ஒரு முயற்ச்சியும் ஈடுப்பட்டதில்லை. அலுவலகத்திலும் அவர் அமர்ந்து பணியாற்றுவதில்லை. மன்ற உறுப்பினர்கள் ஏதேனும் கோரிக்கைகள் வைத்தால் அவர்கள் மீது வன்கொடுமை வழக்கு தொடுக்கிறார்கள். பேருராட்சியில் குடிநீர் விநியோக பிரச்சனை ஏற்ப்பட்ட போது எந்த ஒரு முயற்ச்சியும் எடுக்கவில்லை. அவர் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள பள்ளியில் பணி புரிந்து வருகிறார். இதனால் பேருராட்சி அலுவலகம் வருவதேயில்லை. எனவே அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து தலைவர் பதவியில் நீக்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினார்.