கடலுார் மாவட்டம், புவனகிரியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில், மாநில வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழியை அவதுாறான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து பேசியவர்கள் குண்டர் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி மத்திய மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமையில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். அந்த புகார் மனுவில், வன்னியர் சங்க மாநில தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தை கட்சியினரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் திருச்சி மத்திய மாவட்ட பா.ம.க.சார்பாக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் .
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வன்னியர் சங்க செயலாளர் கதிர் ராஜா, மாவட்ட அமைப்பு தலைவர் வினோத், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் , வழக்கறிஞர் கங்காதரன் , மாநில வன்னியர் சங்க செயற்குழு உறுப்பினர் நாராயணசாமி ,மேற்கு தொகுதி செயலாளர் வழக்கறிஞர் நீயூமேன் , தொகுதி தலைவர் சிவபிரகாஷ், புத்தூர்பகுதி செயலாளர் செந்தில்குமார், ஜங்ஷன் பகுதி செயலாளர் பாஸ்கர், உறையூர் பகுதி செயலாளர் தினேஷ், வன்னியர் சங்க ஸ்ரீரங்க பகுதி செயலாளர் சந்தோஷ், ராஜ்குமார், மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் ஸ்ரீகாந்த், மாவட்ட பசுமை தாயக செயலாளர் ஶ்ரீதர் உள்பட ஏராளனோர் கலந்து கொண்டனர்.