திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்ததைப் போல இன்று ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை திருப்தி இல்லாத புகாரர்களை மறுபடியும் வர வைத்து அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களையும் வரவைத்து மனு விசாரணை நடைபெற்றது. மேலும் உடனடியாக அந்த பிரச்சனைகளை
தீர்த்து வைக்க அறிவுறுத்தி உள்ளார்கள். எனவே நீண்ட கால நிலுவை பிரச்சினைகள் மாவட்டத்தில் குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புகார்தாரர்களை மொத்தமாக அமர வைத்து துணை காவல் கண்காணிப்பாளர்களுடன் கலந்துரையாடல் செய்து மனுவிசாரணையை முடிக்க அறிவுறுத்தப்பட்டது.