Skip to content
Home » 9 வருடமாக ஏமாற்றும் நடிகர் கமல் .. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்..

9 வருடமாக ஏமாற்றும் நடிகர் கமல் .. தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்..

நடிகர் கமல்ஹாசன் கதாநாயகனா நடித்து இயக்குனர் பாலச்சந்தர், ஆண்ட்ரியா, நாசர் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியானது உத்தம வில்லன். இந்த படத்தை பிரபல நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார். இறக்கும் தருவாயில் உள்ள ஒரு நடிகர் தன்னுடைய வாழ்க்கையில் சிறப்பாக அமையும் படியான ஒரு படத்தில் நடிப்பதாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருந்தது. இந்தப் படத்தை பிரபல இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்திருந்தது. படம் படுதோல்வி அடைந்தது. இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வதற்காக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக நடிகர் கமல்ஹாசன் உறுதி அளித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் ஒன்பது வருடங்கள் ஆகியும் இதுவரை நடிகர் கமல்ஹாசன் இது குறித்து எந்த விதமான பதிலும் அளிக்காததால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தயாரிப்பாளர் சங்கத்திடம் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பாக தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் ஒப்புக்கொண்டபடி தயாரிப்பாளர் சங்கம் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தி தங்களுக்கு விருப்பமான கதையில் நடிக்க அவரை ஒப்புக்கொள்ள செய்ய வேண்டும் என்று இந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *