ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் ஈவிகேஸ் இளங்கோவன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்து முடித்தவுடன் தனது பிரச்சாரத்தை துவக்கினார். முதற்கட்டமாக வீரப்பன்சத்திரம் (வார்டு 17) பகுதியிலும் மாலையில் ஜீவா நகர் (வார்டு 16) ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் இளங்கோவன் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தின் போது கரூர் மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மின்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது ஆட்சிக்கு வந்த 20 மாதங்களில் திமுக அரசு செய்து கொடுத்துள்ள திட்டங்களை பட்டியலிட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி அவற்றை நினைத்து ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.