அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மாநில குழு உறுப்பினர் எஸ் வாலன்டினா தலைமையில ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதகமாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்திற்கான நிதியோ இயற்கை பேரழிவுக்கான நிவாரண நிதியோ வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது. அனைத்து
மாநிலங்களுக்கும் உரிய முக்கியத்துவத்தை பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஊர்வலமாக வந்த கம்யூனிஸ்ட் கட்சியினரை 4 ரோடு அருகே மறியலில் ஈடுபட முயற்சித்தவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மறியலில் ஈடுபட முயற்சித்த 24 பெண்கள் உட்பட 82 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.