திருச்சி காஜாமலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த விதமான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து போராட்டத்தை ஈடுபட்ட மக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது..
காஜாமலை பகுதி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும். இந்த பகுதியில் ஏராளமான பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் அடிக்கடி சாலைகளில் சாக்கடை நீர் ஆறு போல் ஓடுவதால் துர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது.
குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் குழந்தைகள் ,முதியோர், பெண்கள் என ஏராளமானோர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள். இது போன்ற அனைத்து பிரச்சனைகளையும் இந்த பகுதி கவுன்சிலர் காஜாமலை விஜியிடம் பலமுறை பொதுமக்கள் சார்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கவுன்சிலர் காஜாமலை விஜி கடந்த 2 ஆண்டுகளாக அதிகாரியிடமும் மேயரிடமும் பிரச்சனைகளை குறித்து
கோரிக்கையை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர். பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இடத்திற்கு நேரில் வந்த திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனை திமுக கவுன்சிலர் விஜி மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என மேயர் அன்பழகன் வாக்குறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி கூறியது..
கடந்த இரண்டு ஆண்டுகளாக மாமன்ற கூட்டம் மற்றும் அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து எனது வாட் பிரச்சனைகள் குறித்து கோரிக்கையை முன்வைத்தேன் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக மேயரை பலமுறை சந்தித்து கோரிக்கை வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாதால் எனது வார்டு மக்களுடன் இணைந்து தற்போது போராட்டத்தின் ஈடுபட்டுள்ளேன். அமைச்சர் தொகுதியில் இது போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. நான் சாதாரண கவுன்சிலர் ஆகையால் எனது குரலுக்கு யாரும் மதிப்பு அளிக்கவில்லை என தெரிவித்தார்.