Skip to content

திருச்சியில் டிராபிக் போலீசாருக்கு மோர்- பழச்சாறு வழங்கிய கமிஷனர் காமினி…

  • by Authour

போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு மோர் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு வழங்கும் திட்டத்தின்கீழ், திருச்சிமாநகர காவல்துறையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சைபழச்சாறு வழங்கியும், வெயிலை தாங்கும் தொப்பிகளையும்

போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வில் திருச்சி மாநகர காவல் துணைஆணையர்கள் ஈஸ்வரன், சிபின் மற்றும் காவல் உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 244 போக்குவரத்து காவலர்களுக்கும் மோர், எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட உள்ளது

error: Content is protected !!