சென்னை டி.பி. சத்திரத்தை சேர்ந்தவர் ரவுடி ரோகித் ராஜ். இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரை விசாரணைக்கு அழைத்து சென்றபோது அவர் போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றார். அப்போது அங்கிருந்த பெண் எஸ்.ஐ. கலைச்செல்வி, ரவுடி ரோகித் ராஜின் காலில் துப்பாக்கியால் சுட்டு அவரை பிடித்தார். பெண் எஸ்.ஐயின் இந்த துணிச்சலான நடவடிக்கையை பாராட்டி, மாநகர போலீஸ் கமிஷனர் கலைச்செல்வியை அழைத்து அவரை பாராட்டி வெகுமதி அளித்தார்.