இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 8ம் ஆண்டு நினைவு நாளான இன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் BHEL அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் உள்ள புரட்சித்தலைவரின் சிலை மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து லால்குடி சட்டமன்ற தொகுதியில் லால்குடி ரவுண்டானா
அருகிலும்.. மணப்பாறை சட்டமன்ற தொகுதி, காலை 11.30 மணியளவில், மணப்பாறை பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகிலும் புரட்சித்தலைவி அம்மாவுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட நிகழ்வுகளில் கழகத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.