பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், புதுவேட்டக்குடி கிராமத்தில் குடியிருக்கும் ஆதிதிராவிடர் பொதுமக்கள் போதிய இட வசதியின்மை காரணமாக குடியிருக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆதிதிராவிடர் மக்கள் 350 பேருக்கு காலணி வீடு கட்ட வீட்டுமனை பட்டா கேட்டு, ஆ.இராசா.எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தனர்.
உடன் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் குன்னம்
சி. இராஜேந்திரன், ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் சத்தியமூர்த்தி, குன்னம் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் சின்னதுரை, அரசு வழக்கறிஞர் ப.செந்தில்நாதன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் செ.வல்லபன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார்,
மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தி.மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர் உள்ளிட்ட பலர் உள்ளனர்.