புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றியம்
துழையானூர் கிராமத்தில் ரூ12.46கோடிமதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடமும், ஆலங்குடி பேரூராட்சி கீழாத்தூர் கிராமத்தில் ரூ 12.40கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடமும் இன்று திறந்து வைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இவற்றை திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆகியோர்
கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினர்.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலெட்சுமி தமிழ்செல்வன், மண்டல இணை இயக்குநர் (கல்லூரிகள்) பொன்முத்துராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.சுப்புராம்,உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
[