நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் இந்த சட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை சரபோஜி அரசு கல்லூரியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் ரஞ்சித் தலைமை வகித்தார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.