Skip to content

ஆம்புலன்ஸ் ஸ்ட்ரெக்சர் அடியில் கல்லூரி மாணவரின் தலை சிக்கியதால் பரபரப்பு….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் , குத்தாலம் தாலுக்கா எலந்தகுடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் முகமது சாஜித் (19), முகமது ரியாம் (19) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் காரைக்கால் மாவட்டம் நல்லாத்தூர் சென்று விட்டு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பியதாக கூறப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்ட எல்லையான நல்லாடை காவல் சோதனை சாவடி அருகே திருப்பத்தில் விபத்து ஏற்பட்டது. இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் இருந்த நல்லாடை காவல் சோதனை சாவடியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் இருவரையும் மீட்டு நல்லாடை தனியார் சமூக நல அறக்கட்டளை இலவச ஆம்புலன்ஸில் ஏற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸை நல்லாடையைச் சேர்ந்த ஓட்டுநர் ராகவன் என்பவர் ஒட்டி வந்தார். ஆம்புலன்ஸில் முகமது ரியாம் (19) ஸ்ட்ரெக்சரிலும், முகமது சாஜித் (19), அமர்ந்தும் வந்துள்ளனர். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை உள்ளே வந்த ஆம்புலன்ஸ், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு பகுதிக்கு திரும்பிய போது ஆம்புலன்ஸில் இருந்த முகமது சாஜித் கீழே சாய்ந்து முகமது ரியாம் படுக்க வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ரெக்சர் அடியில் தலை சிக்கிக் கொண்டது.

முகமது சாஜித் தலை ஸ்ட்ரெக்சரக்கு அடியில் நன்றாக சிக்கி கொண்டதால் தலையை எடுக்க முடியாமல் கதறியுள்ளார். மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மீட்க முயற்சித்தும் பலனளிக்காதாதால் மயிலாடுதுறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர். போராடி ஸ்ட்ரக்சரை கட் செய்து முகமது சாஜித்தை பத்திரமாக மீட்டனர். மாணவர்கள் இருவரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸில் ஸ்ட்ரெக்சர் அடியில் சிக்கிய மாணவனை 1 மணிநேர போராட்டத்திற்கு பின் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்ட சம்பவம் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

error: Content is protected !!