காவேரி கரைகள் மற்றும் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம் மாயனூர் காவேரி கரையோரம் பகுதிகளில் பல்வேறு அரசுத்
துறைகள் இணைந்து பனை விதை நடும் பணி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளுடன் இணைந்து கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாம சுந்தரி பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் அப்பகுதியில் 100 நாள் பணி செய்து வந்தவர்களை கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து பணிகள் குறித்தும், தமிழ்நாடு அரசு கொண்டுவந்த திட்டங்கள் அனைத்தும் வருகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார் அதற்கு 100 நாள் பணி செய்து வரும் தொழிலாளர்கள் அனைத்து திட்டங்களும் சரியான முறையில் வந்து கொண்டுள்ளதாக கூறி பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.