தஞ்சாவூர் அன்னை வேளாங்கண்ணி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில் மாணவர்களின் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
முன்னதாக நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் அருட்தந்தை செபாஸ்டின் பெரியண்ணன், கல்லூரி நிர்வாக தந்தை ஆரூண் ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் பிலோமிநாதன் முன்னிலை வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், போக்குவரத்து காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.ஜி. ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் இருந்து மாணவர்கள் ஹெல்மெட் அணிதல் மற்றும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுதல் உறுதிமொழிகளை ஏற்று விழிப்புணர்வு பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணி புதிய ஹவுசிங் யூனிட், புதிய பேருந்து நிலையம் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.