Skip to content

கரூர்…. சாமி பாடலுக்கு அருள் வந்து சாமி ஆடிய கல்லூரி மாணவ-மாணவிகள்… பரபரப்பு..

  • by Authour
கரூர் மாநகரை ஒட்டிய புறநகர் பகுதியான வெண்ணைமலையில் தனியார் (கொங்கு) கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரியின் 25ம் ஆண்டு விழா இன்று நடைபெற்றது.  இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.  அப்போது மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் வண்ண மயமாக நடைபெற்றது.
 திரைப்பட பாடல்களுக்கு மாணவ, மாணவிகள் நடனமாடினர்.
இதனை அக்கல்லூரியை சார்ந்த மாணவ, மாணவிகள் ஆரவாரத்துடன் ரசித்தனர். அப்போது கருப்பண்ண சாமி மற்றும் அம்மன்
பாடல்களுக்கு மாணவ, மாணவிகள் நடனமாடிய போது பார்வையாளராக இருந்த மாணவ, மாணவிகள் பலருக்கும் அருள் வந்து சாமியாடினர். அவர்களை சக மாணவிகளும், ஆசிரியர்களும் பிடித்துக் கொண்டு நெற்றில் திருநீரு பூசி சாந்தப்படுத்தி அரங்கை விட்டு வெளியேற்றினர். இதனால் இன்நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
error: Content is protected !!