Skip to content
Home » கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை….

கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை….

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ் இவரது மகன் விஷ்ணு 19 இவர் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி சரஸ்வதி தியாகராஜா (STC) கல்லூரியில் BBA முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார். மாதிரிதேர்வு முடிந்த நிலையில் ஊருக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துவிட்டார். இந்நிலையில் இரவு நீண்ட நேரமாகியும் விஷ்ணு உணவு அருந்த வராததால் அங்குள்ள மாணவர்கள் அவரை அழைக்கச் சென்றனர் . நீண்ட நேரம் ஆகியும் கதவுவை திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது தூக்கில் தொங்கியவாரு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர்.  பின்னர் கதவை உள்ளே சென்று பார்த்த போது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்து எடுத்து அங்கு உறைந்த போலீஸ் சார் இருந்த விஷ்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவன் தூக்கில் தொங்கியவாரு இருந்ததை கண்டு கல்லூரி நிர்வாகத்திடம் சொல்லி நீண்ட நேரம் ஆகியும் வராமல் அலட்சியத்துடன் இருந்ததாகவும் எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள மாணவர்கள் மாணவன் இறப்புக்கான காரணத்தை போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *