தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளை எதிர்காலத்தை மேம்படுத்த, தமிழகத்தில் முதல் முறையாக நாகையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் வங்கி பணியாளர் (IBPS) போட்டித் தேர்வு பயிற்சி துவக்கம். போட்டி பயிற்சி தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வேலைகளில் சேர்ந்து நாட்டுக்கு நற்பணியாற்ற வேண்டும். கல்லூரி மாணவ மாணவிகளுக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிவுரை.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பட்டு கழகம் சார்பில் இன்று நாகையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்திற்கான போட்டித் தேர்வு பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
தமிழகத்திலேயே முதல் முறையாக நாகையில் துவக்கப்பட்ட இந்த போட்டித் தேர்வு பயிற்சிக்கான அனுமதி ஆணையினை EGS, பிள்ளை தனியார் கல்லூரிக்கு, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, போட்டி பயிற்சி தேர்வில் பயின்று வெற்றி பெறும் கல்லூரி மாணவ மாணவிகள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பணிகளில் சேர்ந்து நாட்டுக்கு நற்பணியாற்ற வேண்டும் என்றார். தாட்கோ திட்டத்தின் மூலம் துவங்கப்பட்ட இந்த போட்டி பயிற்சி தேர்வு, வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். நாகை தனியார் கல்லூரியில் நடைபெற்ற, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் வங்கி பணியாளர் (IBPS) போட்டித் தேர்வு பயிற்சி துவக்க விழாவில், தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகை எம்.பி செல்வராசு, தாட்கோ நிர்வாக இயக்குனர் கந்தசாமி உள்ளிட்டா கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.