சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் முகமது சுகைல் (22). இவர் சென்னை ராமாபுரத்தில் விடுதி ஒன்றில் தங்கி, அதே பகுதியில் உள்ள கல்லுாரி ஒன்றில் எம்.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு, 9:00 மணியளவில், நண்பர்களுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆர்.கே.ஈவென்ட்ஸ் என்ற பெயரில், ஹரீஷ் என்பவர் நடத்தி வரும், கிங்ஸ் பார்க் ஓட்டலில் உள்ள, ‘பப்’ பிற்கு சென்றுள்ளார். அங்கு நடனமாடிக்கொண்டிருந்த சுகைல் இரவு உணவை அங்கேயே சாப்பிட்டு விட்டு மீண்டும் நடனமாடியுள்ளார். திடீரென சுகைல் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, உயிருக்கு போராடிய முகமது சுகைல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.