புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஹரிநிஷா. இவரும் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பெருமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி 2 பேரும் இனாம்குளத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலாங்குளத்துபட்டியில் உள்ள சிவானி இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் புலாங்குளத்துப்பட்டியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு சாலை ஓரம் 2 பேரும் நின்றுள்ளனர். அப்போது அப்பகுதியாக வந்த கார் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் ஹரிநிஷா பலத்த காயமடைந்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனைதொடர்ந்து அவருடன் வந்த தோழி வினோதினி புகார்அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் இனாம் குளத்தூர் காவல் நிலைய போலீசார் விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அ ப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியது.
