கல்லூரி மாணவர் தற்கொலை.. திருச்சி கல்லுக்குழி செங்குளம் காலனியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.இவரது மகன் ரேவந்த் ( 19).திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ரேவந்த் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் எழுந்ததும் தனது மகன் தூக்கில் தொங்கியதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்த தகவலின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் காதல் தோல்வியா? அல்லது வேறு ஏதும் காரணமா ?என்பது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கத்தி முனையில் முதியவரிடம் பணம் பறித்த 2வாலிபர்கள் கைது…
திருச்சி, திருவரங்கம், மேல வாசலைச் சேர்ந்தவர் கண்ணன் (52). இவர் மேல வாசல் அருகே நின்றுகொண்டிருந்தார், அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் கண்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து சென்றனர். இது குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து அதே பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (27) மற்றும் கஜேந்திரன் (20) ஆகியோரை கைது செய்தனர்.
தாய்ப்பால் கொடுக்கும்போது.. மூச்சுத்திணறி பச்சிளம் குழந்தை பலி
திண்டுக்கல் மாவட்டம், வடசந்துார், கள்வர்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (29), இவரது மனைவி தனலெட்சுமி. இத்தம்பதிக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனசெட்சுமி திருச்சி, காந்தி மார்க்கெட்டில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு வந்தார். அங்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். அப்போது குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெருமாள் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ் மோதி இளம்பெண் பலி.. போலீசார் விசாரணை
திருச்சி, அரியமங்கலம், உக்கடை பகுதியைச் சேர்ந்தவர் பிரம்பையன்.இவரது மகன் பிரியா (20).இவர் இன்று அதிகாலை 1.30 மணி யளவில் இருசக்கர வாகனத்தில் திருச்சி – சென்னை நெடுஞ்சாலை, பால்ப்பண்ணை, ரயில்வே பாலம் அருகே சென்றுகொண்டிந்தார். பின்னால் அவரது உறவினர் மதன் அமர்ந்திருந்தார். அப்போது அதே வழியாக அதிவேகமாக வந்த பஸ் இந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் பிரியா துாக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார், அவருடன் வந்த மதன் இடது கையில் பலந்து காயமடைந்தார். இந்த விபத்து குறித்து பிரியாவின் தோழி ஸ்ருதி அளித்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத பஸ் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.