கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சுற்றுச் சுவர் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
மேலும் மேற்குவங்க மாநிலத்தை பரூன் கோஸ் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது.
இது குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் சைட் இன்ஜினியர் சாதிக் உல் ஆமிர் – கட்டுமான நிறுவன உரிமையாளர் சீனிவாசன் – மேற்பார்வையாளர் அருணாச்சலம் ஆகிய
3பேர் மீதும் 2 பிரிவுகளில் குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.