கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் ஹோசஹள்ளியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்தவர் சுசித்ரா(20). மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த சுசித்ராவின் தந்தை பெங்களூருவில், ஓட்டுநராகவும், அவரது தாய் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையிலும் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சுசித்ரா படிக்கும் கல்லூரியில் படித்தவர் முன்னாள் மாணவரான தேஜாஸ்(23). இவர் சுசித்ராவை காதலித்து வந்துள்ளார். ஆனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதாகக் கூறி, சுசித்ராவை நகரத்திலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குந்தி பெட்டா மலைக்கு தனது டூவீலரில் தேஜாஸ் நேற்று அழைத்துச் சென்றார். அங்கு வந்த பிறகு, இருவரும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.