கோவை மாவட்டம், வால்பாறை நடுமலை சாலையில் நேற்று இரவு தனியார் கல்லூரி பேருந்து உயர் அழுத்த மின் கம்பத்தின் மேல் மோதியது.இதில் கம்பம் முறிந்து சாலையில் சாய்ந்தது இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, பேருந்தில் வந்த கல்லூரி மாணவர்கள் முன் கூட்டியே இறங்கியதால் பதிப்பு இல்லை. பேருந்து ஓட்டுனர் சிறிய காயத்துடன் தப்பினார்.இந்த விபத்தின் காரணமாக இந்த வழியில் செல்ல கனரக வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகள் செல்ல முடியாமல் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக
நடுமலை, பச்சமலை, கருமலை, அக்காமலை, போன்ற எஸ்டேட் பகுதிக்கு செல்லும் பொது மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி குழந்தைகள் நடந்து சென்று எதிரே வரும் வாகனத்தில் செல்கின்றனர், மின் கம்பத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்வதற்கும் மாற்று வழியில் மின் வினியோகம் செய்வதற்கும் காவல் துறையினர் மின் வாரியத்தினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் காரணமாக வால்பாறை நகர பகுதிகள் அனைத்தும் இருளில் மூழ்கியது .