தமிழ்நாட்டில் இன்று 15 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். புதுகை, அரியலூர், தஞ்சை, நாகை. பெரம்பலூர் கலெக்டர்களும் மாற்றப்பட்டனர். இதுபற்றிய விவரம் வருமாறு:
உள்துறை செயலாளர் அமுதா, வருவாய்த்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதில் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவுத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபன் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்
தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக ராஜாராமும்
பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை நலத்துறை செயலாளராக சுரேஷ்குமாரும்
பள்ளி கல்வித்துறை செயலாளராக மதுமதியும் நியமிக்கப்பட்டு உளளனர்.
10 மாவட்ட கலெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு:
ராணிப்பேட்டை கலெக்டராக சந்திரகலாவும்
புதுக்கோட்டை கலெக்டராக அருணாவும்
நீலகிரி கலெக்டராக லஷ்மி பையா தனீரும்
தஞ்சாவூர் கலெக்டராக பிரியங்காவும்
நாகப்பட்டினம் கலெக்டராக ஆகாஷூம்
அரியலூர் கலெக்டராக ரத்தினசாமியும்
கடலூர் கலெக்டராக ஆதித்யா செந்தில்குமாரும்
கன்னியாகுமரி கலெக்டராக அழகுமீனாவும்
பெரம்பலூர் கலெக்டராக கிரேஸ் லாய்ரிந்திகி பச்சாவும்
ராமநாதபுரம் கலெக்டராக சிம்ரன்ஜீத் கலோனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்