Skip to content
Home » மக்கள் குறைகேட்டார் அரியலூர் கலெக்டர்….

மக்கள் குறைகேட்டார் அரியலூர் கலெக்டர்….

  • by Senthil

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று  நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 257 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதியால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக, மாவட்ட ஆட்சியரக அலுவலகக் கூட்டரங்கில், குடியரசு தின விழாவினை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், துறை ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.ஈஸ்வரன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!