புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இன்று (27.09.2024) செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் .அ.கோ.ராஜராஜன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) .முருகேசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.