மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகள்
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில், புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் பதக்கம் பெற்றவர்கள் மற்றும் தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனைகள், மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணவை இன்று நேரில் சந்தித்து, பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா தெரிவித்ததாவது;
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 04.10.2024 முதல் 24.10.2024 முடிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் நமது புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த சிலம்பம், இறகுபந்து, பளுதூக்குதல் மற்றும் குத்துசண்டை விளையாட்டுப் பிரிவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு கீழ்கண்டவாறு பதக்கங்களை பெற்றுள்ளனர்.
இப்போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சமும், இரண்டாமிடம்
பெற்றவர்களுக்கு ரூ.75,000 மும், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு ரூ.50,000 -மும்
வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்கள் விபரம் பின்வருமாறு, பளுதூக்குதல் போட்டிகளில்
பள்ளி பிரிவில் என்.நகுலன் மற்றும் பரணிதரன் தங்கப்பதக்கமும், கல்லூரி பிரிவில்
எஸ்.சண்முகபிரியா மற்றும் மேரிசாமினி வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். இறகு
பந்து போட்டியில் கல்லூரி பிரிவில் தன்முகில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சிலம்பம்
போட்டியில் பள்ளி பிரிவில் மஹாலட்சுமி மற்றும் தவப்பிரியா வெண்கல பதக்கமும்,
கல்லூரி பிரிவில் ப்ரிதியங்கரா வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர். வளைகோல்
பந்து போட்டியில் பள்ளி பிரிவில் விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் வேங்கடகுள
தூய வளனார் பள்ளி மாணவிகள் வெண்கல பதக்கமும் வென்றுள்ளனர்.
அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளும் இதுபோன்று விளையாட்டுகளில் சிறப்பாக விளையாடி உயர்ந்த நிலையினை அடைந்து, புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, கேட்டுக்கொண்டார்.