Skip to content
Home » போட்டி தேர்வு… சிறப்பு பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய பெரம்பலூர் கலெக்டர்…

போட்டி தேர்வு… சிறப்பு பயிற்சி வகுப்பில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய பெரம்பலூர் கலெக்டர்…

பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் இருந்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இன்றைய சிறப்பு பயிற்சி வகுப்பான விலங்கியல் பாட வகுப்பினை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் மாணவர்களுக்கு நடத்தினார்கள். (03.05.2023)
மாணவர்கள் பொதுத்தேர்வு முடிவடைந்ததும் பல்வேறு போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும் என்ற அடிப்படையில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 05ஆம் தேதி தொடங்கப்பட்டு மே 04ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்ப நிதியிலிருந்து ரூ.1.80 லட்சம் மதிப்பீட்டில் போட்டித் தேர்விற்கான புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த இந்த பயிற்சி வகுப்புகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் மாணவர்கள் போட்டி தேர்வுகளை எவ்வித அச்சமும், தயக்கமும், பதட்டமும் இல்லாமல் எழுதும் வகையில் ஒவ்வொரு பாடத்திலும் தலைசிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இறுதியாக 02.05.2023, 03.05.2023, மற்றும் 04.05.2023 ஆகிய தேதிகளில் காலை மாதிரி தேர்வுகளும், மாலை நடைபெறும் வகுப்பில் காலை நடைபெற்ற தேர்வுக்கான பதில்

மற்றும் அது தொடர்பாக மேலும் எழும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிப்பது போன்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இன்று விலங்கியல் தொடர்பாக நடைபெற்ற மாலை நேர பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் நடத்தினார்கள். மாணவர்களுக்கு விலங்கியல் தொடர்பான சந்தேகங்களுக்கு சுலபமாக புரியும் வகையில் மாவட்ட ஆட்சியர் பாடம் நடத்தியதை மாணவர்கள் உற்சாகத்துடன் கவனித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!