Skip to content
Home » சக்கர நாற்காலியில் அமர வைத்து கலெக்டரிடம் மனு அளித்த மாற்றுதிறனாளி…

சக்கர நாற்காலியில் அமர வைத்து கலெக்டரிடம் மனு அளித்த மாற்றுதிறனாளி…

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்தவர் முகமது அலி (54). இரண்டு கால்களும் ஊனமான நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி. இவர் நேற்று கலெக்டர் அலுவலக வராண்டா முகப்பில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அவருக்கு அறிவுரை கூறி சக்கர நாற்காலியில் அமர வைத்து கலெக்டரிடம் மனு அளிக்க வைத்தனர். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2002ம் ஆண்டு ராஜா மடம் கிராமத்தில் வசிக்கும் பக்கிரிசாமி சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான அவருடைய அனுபவத்தில் இருந்த 25 சென்ட் தரிசு நிலத்தை அப்துல் கரீம் மற்றும் அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் பணம் கொடுத்து கிரையம் பெற்றேன். தொடர்ந்து கரடு முரடாக இருந்த அந்த நிலத்தை வெட்டி சமன்படுத்தி கடின உழைப்பால் விவசாயம் செய்து வந்தேன்.

என்னுடைய இடத்திற்கு அருகில் இரண்டு நபர்கள் வேலி அமைத்து அனுபவம் செய்து வருகின்றனர். கடந்த 2009ம் ஆண்டு மேற்படி சுப்பிரமணியன் அந்த இடத்திற்காக ரூ. 25 ஆயிரம் வாங்கிக் கொண்டு மீண்டும் கிரைய பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். அந்த இடத்தை ரூ.1 லட்சம் மதிப்பில் கருங்கல் ஊன்றி கம்பி வேலி அடைத்துள்ளேன். இந்நிலையில் ஏரிப்புற கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் என் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டினர். மேலும் கருங்கற்களையும் இடித்து வேலியை நாசம் செய்தனர். இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!