புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு பணி மாறுதலில் செல்வதை யொட்டி பிரிவு உபசரிப்பு விழா ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் புதுகை எம்எல்ஏ.வை.முத்துராஜா, நகர்மன்ற தலைவி திலகவதிசெந்தில்மாவட்ட வருவாய்அலுவலர்செல்வி, உள்ளிட்ட மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துகொண்டு புதிதாக பொறுப்பேற்க உள்ள பணியில் மென்மேலும் வளர வாழ்த்துக்களை கூறினார். நிறைவாக மாறுதலில் செல்லும் திருமதி கவிதாராமு
இது நாள் வரை தமக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துதுறை அலுவலர்கள், நகர பிரமுகர்கள், அரசியல்
கட்சி பிரமுகர்கள்,பத்திரிக்கை
நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.நிகழ்வில் திருமதி கவிதாராமுவின் கணவரும்
பங்கேற்றார்.