தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பினை தொடர்ந்து 2023ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்புடன் ரூ.1000/- ரொக்கப் பணம் வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று (30.12.2022) சென்னை தலைமைச் செயலகத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் , திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி , அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்கள். உடன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் ஜெ. ராதாகிருஷ்ணன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் வே. ராஜாராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் மருத்துவர் சு.பிரபாகர், வேளாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ. சண்முகசுந்தரம், ஆகியோர் உள்ளனர்.