தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை கலெக்டர் அருணா இன்று பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம்
சித்தூர் அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் கற்றல், கற்பித்தல் திறன்கள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். அங்குள்ள குழந்தைகள் வயதுக்கு ஏற்ற உயரம், எடையில் இருக்கிறார்களா என எடையை சோதித்து பார்த்தார். அங்குள்ள தொடக்கபள்ளிக்கு சென்று சில குழந்தைகளை புத்தகத்தை எடுத்து பாடங்களை படிக்கும்படி கூறினார்.
பின்னர் காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மகப்பேறு பிரிவில் ஆய்வு நடத்தினார். அங்கு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து ஆட்சியர் மு.அருணா கேட்டறிந்தார். காரையூர் கால்நடை மருந்தகத்திற்கு சென்று கலெக்டர் அங்குள்ள மருந்துகளை ஆய்வு செய்தார். காரையூர் ஆதிதிராவிடா் நல மாணவியர் விடுதிக்கு சென்ற கலெக்டர் அங்கு வருகைப்பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அ.அக்பர்அலி, தனித்துணை ஆட்சியர்( சமூக பாதுகாப்பு திட்டம்) அ.ஷோபா , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்