புதுக்கோட்டை நகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக புதுக்கோட்டை நகரமே வெள்ளக்காடானது. நேற்று காலை வரை ஆறுபோல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பூமார்க்கெட் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தேங்கி நின்ற மழைநீரினை ஆட்சியர் மு.அருணா மழைநீரில் நடந்தே சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேங்கி இருந்த வெள்ளநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கலெக்டருடன் மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் ,ஆணையர் நாராயணன், வட்டாட்சியர் பரணி,மாமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சேட்,மற்றும் அரசு அலுவலர்கள் சென்றனர்.