மிஷன் வாட்சாலயா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி நிதி உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பதிக்கப்பட்ட 200 குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக மாதம் (ரூ.4000/- வீதம் அக்டோபர் 2023 முதல் மார்ச் 2024 வரை) 6 மாதங்களுக்கு குழந்தைகளின் திட்டகாலத்திற்கு ஏற்ப மொத்த கூடுதல் தொகை ரூ.47,76,000/- வழங்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் தாய் தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பதிக்கப்பட்ட 57 குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக மாதம் (ரூ.2000/- வீதம் ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை) 12 மாதங்களுக்கு குழந்தைகளின் திட்டகாலத்திற்கு ஏற்ப மொத்த கூடுதல் தொகை ரூ.12,88,000/- வழங்கப்பட்டது.
வளர்ப்பு பராமரிப்பு திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 2 குழந்தைகளுக்கு அவர்களின் படிப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக மாதம் (ரூ.4000/- வீதம் ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை) 12 மாதங்களுக்கு மொத்த கூடுதல் தொகை ரூ.96,000/- மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மு.தர்மசீலன் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.