கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி சார் ஆட்சியர் முன்பு விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி-ஏப்-18
கோவை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆறு மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் முறையீடு கூட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது,இதில் ஆனைமலை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி சுற்று வட்டார விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்,இதில் பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தில் தனியார் தோட்டத்தில்
கடந்த சில மாதங்களாக கழிவு நீர் உள்ளே செல்கிறது,இதை தடுக்கும் விதமாக விவசாயிகள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை, அதிகாரிகள் அலட்சியப் போக்கால் விவசாய நிலத்தில் கழிவு தேங்கியுள்ளது இதனால் சுகாதாரகேடு ஏற்ப்படுகிறது இதை கண்டிக்கும் விதமாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாய முறையீட்டு கூட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்,விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல கட்ட போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.