புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்றுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .அ.கோ.ராஜராஜன் ,தனித்துணை
ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.