புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அறிவியல் கண்காட்சி நடந்தது, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, குத்துவிளக்கேற்றி கண்காட்சியை திறந்து வைத்து, மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.
பின்னர் கலெக்டர் அருணா தெரிவித்ததாவது:
தமிழக அரசு மாணாக்கர்களின் கல்வி நலனில் மிகுந்த அக்கறைகொண்டு எண்ணற்ற கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாணாக்கர்களுக்கான அறிவுசார்ந்த போட்டிகள், அறிவியல் கண்காட்சிகள், அறிவு சார்ந்த புத்தக கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்றையதினம், பள்ளிக்கல்வித்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டது.
இந்த அறிவியல் கண்காட்சியில், உணவு, பொருட்கள், நம்மைச்சுற்றி வசிக்கும் உயிரினங்களின் உலகம், நகரும் பொருட்கள், மக்கள் மற்றும் அவர்களை சார்ந்த கருத்துகள், உபகரணங்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதற்கான விளக்கம், இயற்கை நிகழ்வுகள், இயற்கை வளங்கள் ஆகிய தலைப்புகளில் மாணவிகள் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்திய மாணவிகளுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற பல்வேறு கண்காட்சிகளில் மாணவிகள் தங்களது சிறந்த படைப்புகளை காட்சிப்படுத்திட வேண்டும் .
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இந்நிகழ்வில், முதன்மைக் கல்வி அலுவலர்சண்முகம், மாவட்ட சமூகநல அலுவலர் .க.ந.கோகுலப்பிரியா, பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) .வெள்ளைச்சாமி, மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மெ.சி.சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்.கி.வேலுசாமி, பட்டதாரி ஆசிரியர் (ஒருங்கிணைப்பு) ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்