Skip to content

குளித்தலையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட கடம்பர் கோவிலில் கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் குளித்தலை நகராட்சி இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் நந்தகுமார் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் தனியார் பள்ளி சாரண மாணவ மாணவியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளித்தலை கடம்பர்

கோவில் ஆற்றங்கரை அருகே நடைபெற்ற தைப்பூசத்தின் போது பொதுமக்களால் விட்டு செல்லப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள் குப்பைகளை சாக்கு பைகளில் சேகரித்து இடத்தினை தூய்மையாக்கினர். முன்னதாக நகராட்சி கமிஷனர் நந்தகுமார் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்படுத்த மாட்டோம் மீண்டும் மஞ்சள் துணி பைகளை பயன்படுத்துவோம் என பிளாஸ்டிக் ஒழிப்பு உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

error: Content is protected !!