திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுவகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நேற்று மாவட்ட அளவிலான உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழாவில் நுகர்வோர் விழிப்புணர்வு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்பையா. இந்திய தர நிர்ணய இணை இயக்குநர் (மதுரை) ரமேஷ். மாவட்ட தன்னார்வ நுகர்வோர் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.