திருச்சி கொள்ளிடம் ஆற்றில் சுமார் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரவில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நாளை மேலும் அதிகரிக்கும். இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் உள்ள உயர் அழுத்த மின் கம்பம் சரிந்து காணப்படுகிறது. அது எந்த நேரத்திலும் சாய்ந்து விழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.
காலை 11 மணி முதல் கொள்ளிடம் நேப்பியர் பாலத்தின் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது. போக்குவரத்து பைபாஸ் வழியாக திருப்பி விடப்பட்டது. இந்த நிலையில் கொள்ளிடம் பாலத்தின் வழியாக செல்லும் உயர் அழுத்த மின் கோபுர லைனை துண்டிக்க மின்வாரிய அதிகாரிகள் முயன்றனர். கம்பத்தின் மீது ஏறி அதை கழற்றி எடுக்கும்போது கம்பம் சாய்ந்த விடுமா என்ற அச்சம் ஒருபுறம் உள்ள நிலையில் ஒயரை துண்டிப்பது குறித்து அதி்காரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையில் பிற்பகல் 2.30 மணிக்கு கொள்ளிடம் பாலத்தில் தற்காலிகமாக போக்குவரத்தை அனுமதித்தனர்.