Skip to content

கோவை..குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய வாலிபர்… உயிர்தப்பிய தூய்மை தொழிலாளர்கள்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரத்திற்குட்பட்ட நந்தனார் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கோடை காலம் என்பதால் தூய்மை தொழிலாளர்கள் வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநில பதிவென் கொண்ட சரக்கு லாரி ஒன்று தாறுமாறாக அதி வேகமாக வந்து உறங்கிக் கொண்டிருந்த தூய்மை தொழிலாளர்கள் நோக்கி வருவதை அறிந்த அப்பகுதி மக்கள் எழுப்பிய எச்சரிக்கையை அடுத்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியபடி எழுந்து ஓடி நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். வேகமாக வந்த சரக்கு லாரி அங்கிருந்த கற்கள் மீது மோதியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது அப்பகுதியில் இருந்த

ஒரு சில இளைஞர்கள் ஓடிவந்து லாரியை ஒட்டி வந்த நபர்களை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது குடிபோதையில் வாகனத்தை இயக்கியது தெரிய வந்தது இதனை அடுத்து லாரி ஓட்டுநர் மற்றும் உடன் வந்த நபரை பிடித்து மகாலிங்கபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது இதனை அடுத்து லாரியை பறிமுதல் செய்த மகாலிங்கபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!